ஹெச்எம்டி நிறுவனத்தின் சார்பாக ஆண்ட்ராய்டு துனையுடன் வந்துள்ள நோக்கியா பிராண்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ரூ.10 ,500 (Euro 139) விலையில் தொடக்க நிலை ஸ்மார்ட்போன் மாடலாக வந்துள்ளது.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC17

நோக்கியா 3 ஸ்மார்ட்போன்

பர்சிலோனாவில் தொடங்கி உள்ள 2017 மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போன் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை கொண்ட மொபைலாக வந்துள்ளது.

திரை மற்றும் பிராசஸர்

5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் வந்துள்ள இந்த கருவி 1280 x 720 பிக்சலுடன் 2.5 டி கொரில்லா கிளாஸ் பெற்று   MTK 6737, குவாட்கோர் உடன் செயல்படுகின்ற 2GB ரேம் பெற்று  16GB வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128GB வரை விரிவாக்க இயலும்.

கேமரா

மிக தெளிவான படம் மற்றும் வீடியோவினை பதிவு செய்யும் வகையிலான கேமராவை பெற்று விளங்குகின்ற இந்த மொபைல் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவில் எல்இடி ஃபிளாஷ் போன்றவை பெற்றுள்ளது.

முன்புறத்தில் மிக சிறப்பான செல்ஃபீ படங்களை வெளிப்படுத்தும் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் - MWC17

பேட்டரி

2650mAh பேட்டரி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

மற்றவை

ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, போன்றவை இடபெற்றுள்ளது.

நோக்கியா 3 விலை

இந்த கருவி சில்வர் , கருப்பு ,நீலம் வெள்ளை மற்றும் காப்பர் போன்ற நிறங்களுடன் வந்துள்ள முதல் விரைவில் விற்பனைக்கு கிடைக்க உள்ள பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் விலை ரூ.10 ,500 (Euro 139) ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here