இந்திய சந்தையில் ஜூன் 13ந் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்களை காணலாம்.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் - முழுவிபரம்

நோக்கியா 3 ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற நோக்கியா பிராண்டின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 போன்றவை முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

பாலிகார்பனடேட்டால் உருவாக்கப்பட்ட பாடியால் வடிவமைக்கப்பட்டு அலுமினிய சட்டத்தினை கொண்டு 5 அங்குல முழு ஐபிஎஸ் ஹெச்டி திரையுடன் வந்துள்ள நோக்கியா3 கருவியில் 1280 x 720 பிக்சல் தீர்மானத்துடன் 2.5 டி கொரில்லா கிளாஸ் பெற்றுள்ளது.

பிராசஸர் மற்றும் ரேம்

மீடியாடெக் MTK 6737, 1.3GHz குவாட்கோர் உடன் இயக்கப்படுகின்ற இந்த கருவியில் 2GB ரேம் பெற்று 16GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128GB வரை நீட்டிக்க இயலும்.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் - முழுவிபரம்

கேமரா

மிக தெளிவான படம் மற்றும் வீடியோவினை பதிவு செய்யும் வகையிலான கேமராவை பெற்று விளங்குகின்ற இந்த மொபைல்  ஆட்டோஃபோகஸ் 1.12um, f/2 மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்றவை பெற்ற 8 மெகாபிக்சல் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் மிக சிறப்பான வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபீ படங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆட்டோஃபோகஸ் பெற்ற 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

நீக்க இயலாத 2650mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 3 கருவியின் பேட்டரி நாள் முழுமைக்கு தாக்குபிடிக்கும் திறன் கொண்டதாகும்.

மற்ற விருப்பங்கள்

ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, போன்றவை இடபெற்றுள்ளது.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் - முழுவிபரம்

விலை

வரும் ஜூன் 13ந் தேதி வெளியாக உள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் விலை பல்வேறு தகவலின் அடிப்படையில் ரூ. 9000 முதல் ரூ.9999 விலைக்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here