இதுதான்… நோக்கியா 3310 மொபைல் ? விலை எவ்வளவு

வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி நோக்கியா பிராண்டில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய ஹெச்எம்டி திட்டமிட்டுள்ள நிலையில் நோக்கியா 3310 மொபைல் மீண்டும் சந்தைக்கு வருவதாக வெளியான தகவலின் அடிப்படையில் உருவான கான்செப்ட் மாடல் படங்கள்மற்றும் தகவலை காணலாம்.

நோக்கியா 3310

கான்செப்ட் வீடியோஸ் உருவாக்கியுள்ள வீடியோவின் வாயிலாக பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்ற மொபைல் கருவியாக நோக்கியா 3310 வரவாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகின்றது. குறிப்பாக முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே சில குறிப்பிடதக்க டிசைன் மாற்றங்களை கொண்டு மட்டுமே இந்த கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 3310 மொபைலில்  1.5 அங்குல திரையுடன் 256K கலர் , பின்புற கேமரா , பன்பலை ரேடியோ சேவை , 8 ஜிபி சேமிப்பு வசதி போன்றவற்றுடன் படங்கள் மற்றும் தரவுகளை பகிரும் வகையிலான யூஎஸ்பி சார்ஜிப் போர்ட் இடம்பெற்றிர்ருக்கும் எனவும் இந்த வீடியோ குறிப்பிடுகின்றது. மிக சிறப்பான பேட்டரி திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கும்.

வருகின்ற பிப்ரவரி 26 , 2017ல் நடைபெற உள்ள மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் நோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா என் வரிசை மற்றும் 3310 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

நோக்கியா 3310 மொபைல் விலை ரூபாய் 4000 இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன…

மேலும் தொடர்ச்சியாக இதுபோன்ற செய்திகளை அறிந்துகொள்ள பேஸ்புக் லைக் பன்னுங்க – Gadgets Tamilan

Recommended For You