இந்திய சந்தையில் நோக்கியா 3310 மொபைல் ரூபாய் 3,899 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். வருகின்ற மே மாத மத்தியில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நோக்கியா 3310
- 17 ஆண்டுகளுக்கு முன்பாக நோக்கியா 3310 விற்பனைக்கு வெளியிடப்பட்டது.
- புதிய செங்கல் போன் 2ஜி ஆதரவுடன் ,கேமரா வசதியை பெற்றதாக வந்துள்ளது.
- மே மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
வருகின்ற மே மாதம் தேதி இந்தியா சந்தையில் வெளியிடப்படலாம் அல்லது அறிமுக தேதி உள்பட பல்வேறு விபரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு நோக்கியா பிராண்டு உரிமையை பெற்றுள்ள ஹெச்எம்டி நிறுவனம் நோக்கியா 3310 உள்பட நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 மொபைல்களை அறிமுகம் செய்தது.
நோக்கியா 3310
- புஸ் பொத்தான் ஐகானிக் வடிவத்தில்
- 2 MP கேமரா எல்இடி ஃபிளாஷ்
- ஹெட்போன் ஜேக்
- 2.4” வளைந்த லேயர் கொடுக்கப்பட்டுள்ளதால் சூரிய ஒளியிலும் பார்க்க இயலும்
- இரு சிம் கார்டு ஆப்ஷன்
- 2ஜி அலைவரிசை (GSM 900/1800 MHz)
- புதிய UI நோட்ஸ்
- 22 மணி நேரம் பேசும் திறன் கொண்ட அட்டகாசமான பேட்டரி
- பன்பலை ரேடியோ மற்றும் MP3 பிளேயர்
- 16 MB சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி வழியாக 32 GB வரை அதிகரிக்கலாம்
- மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர்
- புளூடூத் 3.0
- நிறங்கள் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே