ரூ. 1,13,500 விலையுடைய விளாடிமர் புட்டின் நினைவை போற்றும் வகையில் நோக்கியா 3310 சுப்ரிமோ புட்டின் எடிசன் மாடலை ரஷ்யாவின் மொபைல் தயாரிப்பாளரான கேவியர் நிறுவனம் டைட்டானியம் மற்றும் கோல்டு கலந்த மாடலாக சூப்ரிமோ புட்டின் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.1.13 லட்சத்தில் நோக்கியா 3310 விளாடிமர் புட்டின் எடிசன் அறிமுகம்

நோக்கியா 3310 சூப்ரிமோ புட்டின்

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் வெளிவந்த நோக்கியா 3310 மொபைல் அபரிதமான ஆதரவை பெற்று விளங்குகின்ற நிலையில் சிறப்பு பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த எடிசன் மாடலானது ஐபோன்களுக்கு இணையான விலையை பெற்று விளங்குகின்றது.

3310 மொபைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பதிப்பில் டைட்டானியம் கலவை கொண்ட டைட்டானோ மாடல் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் உருவ படத்தை தங்கத்தில் பொறித்த மாடல் என இருவிதமான கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூப்ரிமோ புட்டின் பதிப்பின் பின்புறத்தில் விளாடிமர் புட்டின் உருவம் பின்புறத்தில் தங்கத்தில் பதிக்கப்பட்டு கூடுதலாக ரஷ்ய நாட்டின் தேசிய கீதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் பட்டன்களிலும் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது

அடுத்த டைட்டானியம் பதிப்பில் விலை உயர்ந்த டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர் பேனல்களை பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.13 லட்சத்தில் நோக்கியா 3310 விளாடிமர் புட்டின் எடிசன் அறிமுகம்

இந்த மொபைல்களுக்கு என பிரத்யேகமான மரத்திலான செய்யப்பட்ட பெட்டியில் கருப்பு நிற வெல்வெட் துணியால் மெருகேற்றப்பட்ட பாக்சில் நோக்கியா 3310 மொபைல் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த இருமாடல்களும் அடுத்த சில மாதங்களில் ரஷ்யாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மொபைலின் விலை ரஷ்ய ரூபெல்ஸ் மதிப்பில் 99,000 (இந்திய மதிப்பில் ரூ.1.13 லட்சம்) ஆகும்.

ரூ.1.13 லட்சத்தில் நோக்கியா 3310 விளாடிமர் புட்டின் எடிசன் அறிமுகம்

 

ரூ.1.13 லட்சத்தில் நோக்கியா 3310 விளாடிமர் புட்டின் எடிசன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here