ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக மீண்டும் சந்தைக்கு வந்துள்ள நோக்கியா பிராண்டின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 6 மொபைல் 10 லட்சம் முன்பதிவுகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

1 மில்லியன் நோக்கியா 6 மொபைல் முன்பதிவு சாதனை

நோக்கியா 6 விபரம்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6 மொபைல் சீனா நாட்டின் பண மதிப்பில்  CNY 1,699 (இந்திய மதிப்பு ரூ.17,000)  விலையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலே 2.50 லட்சம் முனபதிவுகளை கடந்த நிலையில் நேற்றைய முடிவில் 1 மில்லியன் அதாவது 10,0000 லட்சம் முன்பதிவுகளை கடந்துள்ளது.

1 மில்லியன் நோக்கியா 6 மொபைல் முன்பதிவு சாதனை

jd.com இணையதளத்தின் வாயிலாக சீனா சந்தையில் மட்டுமே முதன்முறையாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நோக்கியா6 ஸ்மார்ட்போனில்   5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன்  2.5டி கொரில்லா கிளாஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 430 SoC உடன் இணைந்த 4GB ரேம் உடன் 64GB இன்டரனல் மெம்மரி பெற்றுள்ளது. மேலும் நோக்கியா6 மொபைல் போனில் இரு சிம் கார்டு ஆப்ஷன்இடம்பெற்றுள்ளது.

இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் கேமரா டியூவல் டோன் எல்இடி பிளாஷ் ஆப்ஷனுடன் மேலும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பிப்ரவரி மாத இறுதியில் 3 புதிய நோக்கியா மாடல்கள் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

1 மில்லியன் நோக்கியா 6 மொபைல் முன்பதிவு சாதனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here