ஆண்ட்ராய்டு துணையுடன் ஹெச்எம்டி வாயிலாக மறுபிறவி எடுத்துள்ள நோக்கியா பிராண்டின் முதல் நோக்கியா 6 மொபைலை தொடர்ந்து நோக்கியா P1 என்ற பெயரில் 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் 2017 மொபைல் வோல்டு காங்கிரஸ் வாயிலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

சமீபத்தில் வெளியான நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அமோக ஆதரவினை பெற்று விற்பனைக்கு வந்த சில நொடிகளிலே விற்று தீர்ந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ள மாடலாக விளங்கும் நோக்கியா பி1  மொபைல் தகவலை முழுதாக தெரிந்து கொள்ளலாம். இந்த பி1 மொபைல் ஸார்ப் அக்வா XX3 மாடலை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.

நோக்கியா பி1 ஸ்மார்ட்போன்

கசிந்துள்ள விபரங்களின் அடிப்படையில் நோக்கியா பி1 உயர்ரக ஸ்மார்ட்போன் வகையை சார்ந்தாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பி1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நொளகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும்.

5.3 அங்குல முழு ஹெச்டி திரை அல்லது QHD திரையை பெற்றதாக ஸ்னாப்டிராகன்  835 SoC உடன் இணைந்த 6 ஜிபி ரேம் பெற்று செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் மிக தெளிவான புகைபடங்களை வெளிப்படுத்தும் வகையிலான 22.6 மெகாபிக்சல் கேமிரா இடம்பெற்றிருக்கும்.

பி1 ஸ்மார்ட்போனில் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளாக வாட்டர், தூசுகள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் தன்மையை கொண்டிருக்கும்.

  •  Snapdragon 835 SOC Processor
  • 6  GB RAM
  • ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0
  • 5.3 இன்ச் 1080p display
  • 128 GB / 256 GB internal storage
  • 22.3 MP பின்புற கேமரா

நோக்கியா பி1 விலை விபரம்

  • நோக்கியா பி1  128 ஜிபி  $800 (Rs. 54,500)
  • நோக்கியா பி1  256 ஜிபி  $950 (Rs. 64,700)

என இருவிதமான வகைகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான விபரங்கள் பிப்ரவரி 26 யில் நடைபெற உள்ள 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் வெளிவரும் தொடர்ந்து இணைந்திருக்க எங்கள் @gadgetstamilan ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தொடருங்கள்..