இந்தியாவில் நோக்கியா பிராண்டின் பீச்சர் போன் பிரிவில் புதிதாக நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 என்ற பெயரில் இரு மொபைல்கள் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது.

நோக்கியா 105

மீண்டும் நோக்கியா தன்னுடைய முழுபலத்துடன் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ள நிலையில் புதிதாக இரண்டு பீச்சர் போன்களை வெளியிட்டுள்ளது.

1.4 அங்குல திரையுடன் கூடிய 128 x 128 பிக்சல் தீர்மானத்தை பெற்தாக சீரிஸ் ஓஎஸ் 30+ கொண்டு இயங்குகின்ற இந்த மொபைலில் இரு சிம் கார்டு ஆதரவினை பெற்று 2ஜி சேவையை பயன்படுத்தலாம். மற்றொரு 105 கிளாசிக் மாடலில் ஒரு சிம் ஆதரவினை பெறலாம்.

பன்பலை ரேடியோ, ஆடியோ, 2000 தொடர்புகளை சேமிக்கும் திறன் உள்ளிட்ட வசதிகளுடன் 800mAh பேட்டரி திறனுடன் கொண்டு இயக்கப்படுகின்றது.

கருப்பு , வெள்ளை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் நோக்கியா 105 கிடைக்கும். ஒற்றை சார்ஜில் நோக்கியா 105 போன் பேட்டரி ஒரு மாதம் வரையிலான ஸ்டேன்ட்பை டைம் பெற்று, 44 மணி நேர பன்பலை ரேடியோ பயன்படுத்தும் திறனுடன், 15 மணி நேரம் பேசும் திறமை கொண்டதாக உள்ளது.

இந்த மொபைல் ரீடெயிலர்கள் வழியாக ரூ.999 ஒற்றை சிம் வேரியன்ட் மற்றும்  இரட்டை சிம் ஆதரவு பெற்ற மாடல் ரூ. 1,149 விலைக்கு கிடைக்கலாம்.

நோக்கியா 130

நோக்கியா 130 ஃபீச்சர் மொபைல் போன் இரு சிம் கார்டு ஆதரவுடன், வீடியோ, ஆடியோ வசதி மற்றும் மெமரி கார்டு போன்ற வசதிகளை பெறும் வகையில் வந்துள்ளது.

1.8 அங்குல திரையுடன் கூடிய QQVGA 160 x 128 பிக்சல் தீர்மானத்தை பெற்தாக சீரிஸ் ஓஎஸ் 30+ கொண்டு இயங்குகின்ற இந்த மொபைலில் இரு சிம் கார்டு ஆதரவினை பெற்று 2ஜி சேவையை பயன்படுத்தலாம்.

வீடியோ, ஆடியோ, புளூடூத், பன்பலை ரேடியோ,  2000 தொடர்புகளை சேமிக்கும் திறன், 32ஜிபி மெமரி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட வசதிகளுடன் 1020mAh பேட்டரி திறனுடன் கொண்டு இயக்கப்படுகின்றது.

கருப்பு , கிரே மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் நோக்கியா 130 கிடைக்கும். ஒற்றை சார்ஜில் நோக்கியா 130 போன் பேட்டரி 26 நாட்கள் வரையிலான ஸ்டேன்ட்பை டைம் பெற்று, 46 மணி நேர ஆடியோ பயன்படுத்தும் திறனுடன், 16 மணி நேர வீடியோ பயன்படுத்தும் திறனுடன் 13 மணி நேரம் பேசும் திறமை கொண்டதாக உள்ளது.

கடந்த 2016 ஆண்டில் சர்வதேச அளவில் மொத்தம் 40 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை ஆகியுள்ளது.ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் மட்டுமே 130 கோடி மக்கள் ஃபீச்சர் போனை பயன்படுத்துவதாக ஹெச்எம்டி குளோபல் தெரிவிக்கின்றது.