பல்வேறு நாடுகளில் 2ஜி சேவை சரிவடைய தொடங்கியுள்ள நிலையில் 3ஜி ஆதரவு பெற்ற நோக்கியா 3310 மொபைல் அடுத்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3ஜி நோக்கியா 3310
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் 2ஜி சேவையை முற்றிலும் நீக்க உள்ள நிலையில் மீண்டும் புதிதாக பல்வேறு வசதிகளுடன் களமிறங்கிய நோக்கியா 3310 மொபைல் 3ஜி ஆதரவு கொண்டதாக TA-1036 என்ற பெயரில் எஃப்சிசி அனுமதியை பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் புதிய 3310 மாடல் 2ஜி சேவையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் இந்தியாவிலும் 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக ரூ.3310 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
வருகின்ற ஆகஸ்ட் 16ந் தேதி நோக்கியா 8 வெளியாக உள்ள நிலையில் அதே மாடலுடன் இணையாக நோக்கியா 3310 3ஜி மாடலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுட்பவிரங்களில் விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையிலே அனைத்தையும் பெற்றிருக்கலாம். கூடுதலாக 3ஜி சேவையை மட்டுமே பெற்றிருக்கும். இந்தியாவிற்கும் இந்த மாடல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் 2ஜி/3ஜி அலைவரிசை அனுமதி ;-
GSM850: 824.2 MHz ~ 848.8 MHz
GSM1900: 1850.2 MHz ~ 1909.8 MHz
WCDMA Band II: 1852.4 MHz ~ 1907.6 MHz
WCDMA Band V: 826.4 MHz ~ 846.6 MHz
image-npu