2017 உலக அலைபேசி அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள முக்கிய மாடலான நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விபரங்களை ஆன்லைன் விற்பனை இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா 8 மொபைல் விலை ரூ. 32,000 (3,188 Yuan சீனா) ஆகும்.

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் முக்கிய விபரங்கள் வெளியானது

நோக்கியா 8

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக மறுபிரவேசம் ஆண்ட்ராய்டு துனையுடன் களமிறங்கியுள்ள நோக்கியா பிராண்டில் முதல் மாடலாக நோக்கியா 6 அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து வெளியாக உள்ள புதிய மாடல்களில் ஒன்றான நோக்கியா 8 விபரம் jd.com என்ற ஆன்லைன் ஜிங்டாங்(Jingdong) விற்பனை  இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நோக்கியா 6 மொபைலும் அதிகார்வப்பூர்மாக இங்கே விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் முழுநுட்ப விபரங்கள் வெளியிடப்படாமல் சில குறிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

5.7 அங்குல சூப்பர் AMOLED (2560 x 1440 pixels) க்யூஹெச்டி டிஸ்பிளேவினை பெற்று விளங்குகின்ற 8 மொபைலில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துக்கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் இடம்பெற்றிருக்கலாம். ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் செயல்படும். மேலும் இருவிதமான சேமிப்புஆப்ஷனுடன் அதாவது 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி சேமிப்பு அட்டை வாயிலாக 256 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்.

புகைப்படங்களை எடுக்க பின்புறத்தில் 24 மெகாபிக்சல் கேமரா , செல்ஃபீ படங்களுக்கு 12 மெகாபிக்சல் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

வருகின்ற பிப்ரவரி 26 , 2017ல் நடைபெற உள்ள மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் நோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா என் வரிசை மற்றும் நோக்கியா 3310 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here