நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு. 4 வருசத்துக்கு முன்னாடி எப்டி போனானோ, அப்டியே வந்துட்டேன்னு சொல்லு கபாலி வசனத்துக்கு ஏற்ப 120 நாடுகளில் களமிறங்க உள்ள நோக்கியா மொபைல்கள் இந்தியா வருகை உறுதியாகிவிட்டது.

களமிறங்கும் நோக்கியா..! தெறிக்கபோவது யாரு ?

 

களமிறங்கும் நோக்கியா

  • ஆண்ட்ராய்டு தளத்தில் நோக்கியா மொபைல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
  • மீண்டும் புதிய பொலிவுடன் நோக்கியா 3310 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 என மூன்று ஸ்மார்ட்போன்களும் வரவுள்ளது.

களமிறங்கும் நோக்கியா..! தெறிக்கபோவது யாரு ?

 

ஹெச்எம்டி குளோபல் இந்தியா பிரிவு தலைவர் அஜித் மெகத்தா அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் நோக்கியா பிராண்டு மொபைல்கள் ஜூன் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் அதாவது மொபைல் ரீடெய்லர் விற்பனை மையங்கள் வாயிலாக நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய 400க்கு மேற்பட்ட விநியோகஸ்தர்களை நியமிக்கவும், எக்ஸ்குளூசிவ் நோக்கியா பிராண்டு ஷோரூம்கள் மற்றும் நோக்கியா கார்னர் சர்வீஸ் மையங்களை புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, மெகத்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நோக்கியா மொபைல்களை உற்பத்தி செய்யவதற்கு ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதனால் விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியாகும், மேலும் சென்னை அருகே அமைந்துள்ள நோக்கியா மொபைல் தொழிற்சாலை மீண்டும் திறக்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்.

களமிறங்கும் நோக்கியா..! தெறிக்கபோவது யாரு ?

முதற்கட்டமாக இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 என மூன்று ஸ்மார்ட்போன்களுடன் பிரசத்தி பெற்ற செங்கல் செட் நோக்கியா 3310 ப்யூச்சர் போனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நோக்கியா மொபைல் விலை
  • நோக்கியா 3310 ரூ.3500
  • நோக்கியா 3 ரூ.10,500
  • நோக்கியா 5 ரூ.14,000
  • நோக்கியா 6 ரூ.16,000

(குறிப்பிடப்பட்டுள்ள விலை பட்டியல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். இதன் அடிப்பையிலே இந்தியா விலை அமையும்)

சியோமி, சாம்சங், லெனோவா, மோட்டோ போன்ற நிறுவனங்கள்விற்பனை செய்து வரும் ரூ.9000 முதல் 20,000 வரை விலை உள்ள மாடல்களுக்கு மிகுந்த சவாலான மொபைல்களாக அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா மாடல்கள் நிச்சியமாக சந்தையை தெறிக்கவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நோக்கியா மொபைல் வாங்குவீர்களா.. உங்கள் கருத்துகள் என்ன பதிவு செய்யுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here