அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிறகு நாம் வாழுகின்ற பூமியில் இருந்து வெளியேறும் கட்டாயத்துக்கு மனித இனம் தள்ளப்படும் என்பதனால் வேற்று கிரக பயணத்துக்கு தயாராக வேண்டும் என ஸ்டீஃபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதன் வாழ இயலாது  : ஸ்டீஃபன் ஹாக்கிங்

ஸ்டீஃபன் ஹாக்கிங்

  • புவி வெப்பமயமாதல், அணு ஆயுத போர் மற்றும் ஆஸ்ட்ராய்டு மோதலால் பாதிக்கப்படும்.
  • பிபிசி தொலைக்காட்சியில் Expedition New Earth என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளார்.
  • முன்பு 1000 ஆண்டுகள் என்ற சொன்ன ஹாக்கிங் தற்பொழுது 100 ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய உலகம்” (Tomorrow’s World) என்ற தலைப்பில் வெளியான  தொடரின் அடுத்த பகுதியாக வந்துள்ள எக்ஸ்பீடியேஷன் நியூ எர்த் (Expedition New Earth ) என்ற தொடரில் மிக உறுதியாக அடுத்த 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனித இனம் வெளியேறி வேற்று கிரகத்தை நோக்கிய பயனத்தை தொடங்குவது உறுதி என தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதன் வாழ இயலாது  : ஸ்டீஃபன் ஹாக்கிங்

அதிகரித்து வருகின்ற நவீன நுட்பங்களால் பூமிக்கு தினம் ஒரு ஆபத்து உருவாகி கொண்டே உள்ள நிலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் பூமிக்கு மிகப்பெரிய சவாலாக புவி வெப்பமயமாதல், அணு ஆயுத போர் மற்றும் ஆஸ்ட்ராய்டு என அழைக்கப்படுகின்ற சிறிய கோள்களால் மிகுந்த ஆபத்தை பூமி சந்திக்க உள்ளதாக ஸ்டீஃபன் ஹாக்கிங் தியரி வாயிலாக தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் சாதாரனமாகவே உணரக்கூடிய ஒன்றுதான் புவி வெப்பமயமாதல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட புவி வெப்பம் அதிகரித்திருப்பதுடன் பனி படலங்கள் உருகுவதனால் கடல் எல்லை அதிகரிப்பு மற்றும் முன்னணி நாடுகளுக்கு இடையே நிகழும் பனிப்போர் போராக வெடிக்கும் பட்சத்தில் அனு அயுதங்கள் பயன்பாடு அதிகரித்தால் பூமியின் நிலைமை மிக மோசமாக தள்ளப்படும், எனவே 100 ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் வாழவே முடியாத கிரகமாக மாறலாம் என ஸ்டீஃபன் ஹாக்கிங் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here