வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கை குறித்தான ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஏலியன்ஸ் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை காணலாம்.
வேற்றுகிரகவாசிகள் என்பது கட்டுக்கதை என சொல்பவர்களும் உண்டு.. அவை உண்மைதான் என நம்புபவர்களும் உள்ளனர் அல்லவா ? ஏலியன் பற்றிய சில சுவராஸ்யங்கள்…….
- நிலவில் 6 வது மனிதராக காலடி பதித்த எட்கர் மிட்செல் என்பவர் ஏலியன்கள் நம்மை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்கள் என தெரிவிக்கின்றார்.
- பிரேசில் நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியுள்ள செய்தி என்னவென்றால் தன்னை 1952 ஆம் ஆண்டு குரைக்கும் ஏலியன் கடத்த முயன்றதாக தெரிவித்துள்ளார்.
- செஸ் ஆட்டத்தை கண்டுபிடித்தவர்கள் ஏலியன்ஸ் என உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உலக செஸ் கூட்டமைப்பு தலைவரை ஏலியன்கள் கடத்தியதாக நம்புகின்றனர்.
- பறக்கும் தட்டு அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஆங்கிலத்தில் UFO (unidentified flying object) எனப்படும் இந்த வார்த்தையை முதன்முறையாக அமெரிக்க ஏர்ஃபோர்ஸ் அதிகாரி எட்வர்ட் ருப்பெல்ட் என்ப்பவர் 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
- முதன்முறையாக 1960 ஆம் ஆண்டில் வானயியல் ஆராய்ச்சியாளர் பிரான்க் டிராக் வேற்றுகிரக உயரினங்கள் குறித்தான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
- ஓஹியோ மாநில பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 220 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வந்த சிக்னலை கண்டறிந்துள்ளனர். இதற்கு வாவ்சிக்னல் (WOW Signal) என பெயரிட்டுள்ளனர்.
- அமெரிக்காவில் சில தீயணைப்பு வீரர்களுக்கு ஏலியன் விமானம் நொறுங்கனாலோ அல்லது கடத்தப்பட்டாலோ எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.
- crop circles எனப்படும்சில வித்தியசமான மனிதர்களால் வரை இயலாத கோலம் போன்ற அமைப்பினை ஏலியன்கள் உருவாக்கி இருக்கலாம் என கருதுகின்றனர்.
- அமெரிக்காவில் 40,000 பேர் ஏலியன்களால் கடத்தப்படுவோம் என அஞ்சியே அதற்காக தனியான காப்பீடு எடுத்துள்ளனராம்.
- அடுத்த 10 ஆண்டுகளில் ஏலியன்களை தொடர்பு கொள்ள இரண்டு சதவீத வாய்ப்புகள் உள்ளதாம்.
crop circles