ஏலியன் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதா ? என பலதரப்பட்ட வானியல் உலகத்தின் பல பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஏலியன் படையெடுப்பு நடக்க அடுத்த 1500 வருடங்களுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

ஏலியன் படையெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதா ? நடந்தால் எப்பொழுது நடக்கும்

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி ரேடியோ அலைகள் பால்வெளியில் சூரியன் இடம் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை மட்டுமே பயணிக்கும் வல்லமையை பெற்றுள்ளதாக உறுதிப்படுதியுள்ளனர். 
நமது பால்வெளியில் பில்லியன் எண்ணிக்கையில் பூமியை போன்ற கிரகங்கள் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவைகள் மிக அதிகமான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதனாலும் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியோ மற்றும் டிவி சிக்னல்கள் குறைவான வேகத்திலே பயணித்தாலும் 80 ஒளி ஆண்டுகளை மட்டுமே எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனாசோனிக் P75 மொபைல் வாங்க ; Exclusive Snapdeal P75

இதுவரை ரேடியோ சிக்னல்கள் சூரியனை மையமாக கொண்டு  8531 நட்சத்திர மன்டலங்களுக்கும் , 3555 பூமியை போன்ற கிரகங்களுக்கு மட்டுமே சென்றடைகின்றது. ஆனால் நமது அண்டவெளியில் 200 பில்லியன் நட்சத்திர மண்டலங்கள் எண்ணிக்கையில்லா கிரகங்கள் இருக்கலாம் இவைகள் 1,00,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கலாம் என வானியிலாளர்கள் கருதுகின்றனர்.
தற்பொழுது நம்மிடம் உள்ள தொழில்நுட்பங்களை வைத்து ஏலியன்களை தொடர்பு கொள்ள முயன்றாலும் அடுத்த 1500 ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை என வானியல் வல்லுஞர்கள் தெரிவிக்கின்றனர்.
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here