நிலவில் தொலைந்து போன இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டுபிடித்துள்ளது.  கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்யும், நோக்கில் சந்திராயன் – 1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

8 வருடங்களுக்கு பிறகு தொலைந்த சந்திராயன்-1 செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு

சந்திராயன்-1

79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட சந்திராயான் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை அடைந்தது.

நிலவைப் பற்றிய பல தகவல்கள் மற்றும்புகைப்படங்கள் போன்வற்றை இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத வகையில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1 செயற்கைக்கோளுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு தொடர்பினை ஏற்படுத்த முடியாத காரணத்தால்  இறுதியாக காணாமல் போனதாக அறிவித்தது. தொடர்ந்து தேடும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டிருந்த போதிலும் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை என்றும் அது சந்திரனின் மேற்பரப்புக்கு மேலே 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டுபிடித்துள்ளது.

8 வருடங்களுக்கு பிறகு தொலைந்த சந்திராயன்-1 செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு

2 ஆண்டுகள் வரை இதன் இயங்குதிறன் ஆயுள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  அதன் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில், சந்திராயன்-1 ஒரு விண்வெளி குப்பையை போல நிலவைச் சுற்றிவந்து கொண்டுள்ளதாகவும் நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டில் சந்திராயன் 2 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது குறிப்பிடத்தக்கது.