பால்வெளியில் அமைந்துள்ள எண்ணற்ற சுவாரஸ்யங்களை ஆய்வு செய்து வரும் நாசா சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான சனிக்கிரகத்தில் உயிரனங்கள் வாழும் சூழல் உள்ளதாக நாசா கண்டுபிடித்துள்ளது.

சனிக்கிரகத்தில் ஏலியன்ஸ்..! : நாசா

சனிக்கிரகத்தில் ஏலியன்ஸ்

  • கசினி விண்ணோடம் 1997 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
  • சனி கிரகத்தில் உள்ள நிலவுகளில் ஒன்றின் பெயர் என்சலடஸ் ஆகும்.
  • கசினி விண்கலத்தின் ஆயுள் செப்டம்பர் 15 , 2017 -ல் பூர்த்தியாகின்றது.

கடந்த அக்டோபர் 1997 ஆம் ஆண்டு சனி கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் காசினி-ஹூய்ஜென்ஸ் விண்வெளி ஒடத்தில் இடம்பெற்றிருந்த காசினி விண்கலம் 2005 ஆம் ஆண்டு முதல் சனி கிரகத்தை ஆய்வு செய்து வருகின்ற நிலையில் பல்வேறு அறிய படங்களை எடுத்துள்ளது.

சனிக்கிரகத்தில் ஏலியன்ஸ்..! : நாசா

கசினி விண்கலத்தின் ஆயுள் 12 வருடம் 9 மாதங்கள் 14 நாட்கள் என நிர்ணயக்கப்பட்டுள்ளதால் வரும் செப்டம்பர் 15 , 2017 ல் அழிக்கப்படலாம்.

என்சலடஸ் துனைக்கோளின் மேற்பரப்பிலிருந்து பீறிட்டு அடிக்கும் தண்ணீரை கண்டறிந்துள்ளது. எனவே இந்த கோளில்  பூமியை போன்ற தட்பவெட்பமும், உயிர் வாழ தகுந்த சூழலும் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

என்சலடஸ் துனைக்கோளின் விட்டம் 504 கிமீ ஆகும். இந்த பனி படர்ந்த நிலவை 1789 ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்செல் எனும் விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

என்சலடஸ் கோளில் தண்ணீர் உள்ளதால் நுன்னயிர்கள் வாழலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சனி மற்றும் வியாழன் கிரகங்களில் உள்ள பல்வேறு துணைக்கோள்களில் கடல்கள் உறைந்து போயிருக்கின்றதை உறுதி செய்துள்ள விஞ்ஞானிகள் உயிர் வாழ்வதற்கான சூழல் இருப்பதை என்சலடஸ் கோளில் மட்டுமே உள்ளதாக விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here