பூமி கிரகம் அழிவினை நோக்கி சென்று வருவதனால் புதிய கிரகத்துக்கான இடப்பெயர்வினை குறித்து பல விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணில் காய்கறிகள் பயிரிடலாம் என உறுதிசெய்துள்ளனர்.

எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பாதுகாப்பினை தரவல்ல கிரகமாக செவ்வாய் விளங்கும் என பரவலாக கருதப்பட்டு வந்தாலும் டச்சூ நாட்டின் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சியின் விளைவாக செவ்வாயில் தக்காளி , பட்டாணி , கம்பு மற்றும் முள்ளங்கி பயர் வகைகளை விளைவிக்கலாம் என கருதுகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் கேட்மியம், செம்பு மற்றும் ஈயம் போன்ற கனிமவளங்கள் அதிகம் நிறைந்துள்ளவை பயர்களில் அதிக மாசுதன்மையை ஏற்படுத்தும் எனவும் , அலுமினியம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், ஆர்செனிக், கேட்மியம், குரோமியம், நிக்கல் மற்றும் ஈயம் போன்ற கடின உலோகங்களளில் அதிகம் இருந்தாலும் இவற்றில் பயிரிடும் தக்காளி , பட்டாணி , கம்பு மற்றும் முள்ளங்கி போன்றவை விஷதன்மை இல்லாமல் மிக சுத்தமாகவும் , சத்துள்ள பயிர்களாக விளங்குகின்றது. மேலும் இதில் பயிரிடபட்ட உணவு பண்டங்களை திண்பதற்கு ஆர்வமாக உள்ளதாக மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் வீகர் வெம்லிங்க் தெரிவித்துள்ளார்.