உலகில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரனமாக கருதப்படுகின்ற டைனோசர்கள் முதலைகளுக்கு உள்ள நடை அமைப்பை போல நடந்திருக்கலாம் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டைனோசர் நடை

  • டைனோசர்கள் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியல் வாழ்ந்த இனமாகும்.
  • டெலியோகிராடெர் எனப்படும் வகையைச் சேர்ந்த டைனோசர்கள் மாமிச உண்ணி விலங்காகும்.
  • இதன் நடை முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்ற சாயிலில் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

சில ஆய்வுகள் இரண்டு கால்களில் மட்டுமே இந்த உயிரினம் நடந்திருக்கலாம் என கூறப்படுகின்ற நிலையில் நேச்சர் அறிவியல் தளம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் நான்கு கால்களில் நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

டிரையாசிக் யுகம் அல்லது திராசிக் காலம் எனப்படுகின்ற 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு பிரேசில் பகுதியில் வாழ்ந்த 2 முதல் 3 மீட்டர் நீளமுள்ள உள்ள டெலியோகிராடெர் எனப்படும் வகையைச் சேர்ந்த புலால் உண்டு வாழுகின்ற விலங்கின் புதை படிமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் , 4 கால்களை கொண்டு நடந்திருக்கும் வகையிலான இந்த டைனோசர்கள் முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்ற நடை அமைப்பை கொண்டதாக இருந்திருக்கலாம் என உறுதியாக நம்புகின்றனர்.

முதலைகள் நடப்பதை போன்ற அமைப்பை பெற்றதாக டைனோசர்கள் இருந்துள்ளன.

2015 ஆம் ஆண்டு கண்டுபிட்டிக்கப்பட்ட இந்த புதை படிமங்களில் ஆய்வு மேற்கொண்டதில் இந்த டைனோசர்களின் கணுக்கால் அமைப்பு முதலைகளில் அமைந்திருக்கின்ற கணுக்கால் அமைப்புடன் ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

டெலியோகிராடெர் (Teleocrater rhadinus) எனப்படுகின்ற இந்த வகை டைனோசர்கள் இந்தியா, ரஷ்யா மற்றும் அதிகப்படியாக தென் பிரேசில் நாடுகளில் வாழ்ந்திருக்கலாம் என அறியப்படுகின்றது.

தொகுக்கப்பட்டுள்ள படங்கள் டெலிகிராடெர் இவ்வாறு இருந்திருக்கலாம் என அறியப்படுகின்ற மாதிரி படங்களாகும்.