பூமியில் மட்டுமே ஆக்சிஜன் உள்ளதாக கருதப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக பால்வெளியில் ஆக்சிஜன் இருக்கலாம் என கருதப்படும் முக்கிய ஆதாரங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளர்.

சிலி மலைகளில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தில் வாயிலாக உள்ள தொலைநோக்கி  வழியாக இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகளே இதனை கண்டுபிடித்துள்ளனர்

மிக முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படும் பிராண வாயு இருக்கும் மன்டலம் பூமியிலிருந்து 13.1 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் அமைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் பிக் பேங் தியரிலிருந்து ( Big Bang theory – பெரு வெடிப்புக் கோட்பாடு) 700 மில்லியன் வருடங்கள்  பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஆக்சிஜன் இருப்பதற்கான ஐனைஸ்டு எனப்படும் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகத்தின் பெயரை SXDF-NB1006-2 என குறிப்பிட்டுள்ளனர். மிக குறைந்த அளவிலே ஆக்சிஜன் துகள்கள்  கானப்படுகின்றது. குறைவான அளவிலே இருந்தாலும் வானியல் ஆராய்ச்சியில் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.