கடந்த ஜூலை 9ந் தேதி பூமியின் மேற்பரப்பை நோக்கி பறக்கும் தட்டு ஒன்று வந்ததாகவும் அதனை நாசாவின் சர்வதேச விண்வெளி மையம் ஓளிபரப்பும் நேரலையில் தெரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யூடியூப் தளத்தின் வாயிலாக சர்வதேச விண்வெளி  நிலையத்தில் (International Space Station – ISS ) இருந்து ஒளிபரப்படும் நேரலை ஓளிபரப்பில் பூமியை நோக்கி ஒரு பறக்கும் தட்டும் அமைப்பிலான ஒன்று நெருங்கி வருகின்றது. அதனை அடுத்த சில நொடிகளில் நாசா அதனை கத்திரித்து நீக்கி விட்டது.

சர்வதேச விண்வெளி ஓளிபரப்பு காண

ஒளிவீசும் மர்மபொருள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் காட்சியை கொண்ட வீடியோ மிக வேகமாக இணையத்தில் பரவி வைரலாகி போகியுள்ளது. அந்த வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நேரலை ஓளிபரப்பு மிக துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. மிக நவீனத்துவமான நுட்பத்தினை கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் ஏதேனும் சந்தேகத்துக்கு உள்ளான மர்ம்பொருள் காட்சிக்கு வந்தால் அடுத்த சில விநாடிகள் அல்லது நொடிகளில் தானாகவே கணினி செயல்பட்டு அவற்றை மறைத்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மிக அதிநவீன நுட்பங்களை கொண்ட கேமராக்கள் வாயிலாக ஓளிபரப்பு செய்யப்படுகின்ற நேரலை காட்சிகளை மிக நுனுக்கமான முறையில் ஆய்வு செய்யும் வகையில் பல நுட்பங்களை நாசா கையான்டு வருகின்றது. இதற்கு பயன்படும் டிராக்கிங் டேட்டா ரிலே செயற்கைகோள் மிக துல்லியமாக வீடியோ , குரல்கள் போன்றவற்றை பெறும் வகையில் செயல்படும். ஓளிபரப்பில் தடை ஏற்பட்டால் அடுத்த சில நோடிகளில் தன்னை சரிசெய்து கொள்ளும் வகையில் செயல்படும்.