பல லட்சம் உயிர் இனங்களை கொண்டுள்ள இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமலோ அல்லது மனித இனம் அழிந்துவிட்டால் என்ன நடக்கும் என கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது.

அடிப்படையில் வளர்ப்பு பிராணிகள் தொடங்கி வனவிலங்குகள் மாபெரும் வராலாற்று சிறப்புமிக்க கட்டிங்கள் என அனைத்து எவ்வாறு உருமாறும். இவைகள் எதிர்காலத்தில் இருக்குமா அல்லது கானாமல் போகுமா ? என தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கிவிடும். ஒரு வார காலத்தில் பெரும்பாலான வளர்ப்பு பிராணிகள் உணவுக்கு கடுமையான போராட்டத்தினை சந்திக்கும். பல விலங்குகள் இறக்கும். மேலும் அடுத்த ஒரு மாதத்தில் அனு உலைகள் வெடித்து பெரும்பாலான விலங்குகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும்.அனைத்து கட்டிங்களும் செடிகள் கொடிகள் நிறைந்திருக்கும்.

மனித இனம் பூமியை விட்டு மறைந்த 10,000 வருடங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல கட்டிங்கள் மற்றும் மனிதன் வடிவமைத்து அனைத்து பொருட்களும் கானாமல் போகிவிடும். ஆனால் மிகப்பெரிய வராலாற்று படைப்புகளான சீன பெருஞ்சுவர் , எகிப்து பிரமீடுகள் சிதைந்த நிலைக்கு தள்ளப்படும்.  அடுத்த 300 மில்லியன் வருடங்கள் கழித்தே புதிய உயிர்கள் உருவாகும்.