எச்ஐவி எய்ட்ஸ் நோய் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் சவாலாக அமைந்திருந்தாலும் நம் முன்னோர்கள் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்ஐவி கிருமிகளை முழுமையாக அழித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

என்ன..! எய்ட்ஸ் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டதா ?

எய்ட்ஸ்

  • 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே எய்ட்ஸ் இருந்திருக்கலாம்.
  • 2015 ஆம் ஆண்டின் முடிவில் உலகில் 36.7 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அமைந்துள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் நம் முன்னோர்கள் மிக கடுமையான வைரஸ் நோய்களின் மரபணுக்களில் மாறுதல் செய்து அவற்றை பலமற்றதாக மாற்றியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன..! எய்ட்ஸ் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டதா ?

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ கழகத்தின் விஞ்ஞானிகளில் ஒருவரான பால் பீயானீஸ் கூறுகையில் மிகவும் பழைமையான வைரஸ் நிறைந்த புதைபடிமங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் மிகவும் பழைமையான அதாவது 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்ஐவி நோய் கிருமிக்கான மூலக்கூறுகளை பெற்ற வைரஸ் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது புதைபடிவ மரபணுவில் இருந்து பெறப்பட்டுள்ள இந்த வைரஸ் கிருமிகளுக்கு நம் முன்னோர்கள் அதன் மரபணுவிலே மாற்றம் செய்து 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முற்றிலும் நீக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புதிய மொபைல் வாங்குவதில் குழப்பமா உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்க – https://www.gadgetstamilan.com/community/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here