செயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும் என ஜெர்மனி நாட்டின் Friedrich Schiller University Jena (FSU) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்த பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு எனப்படுகின்ற Artificial intelligence (AI)  இன்றைக்கு பெரும்பாலான துறைகளில் முக்கிய அம்சமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

journal Nature என்ற ஆய்வு பத்திரிக்கையில், இது குறித்து தகவலை வெளியிட்ட்டுள்ள இந்த ஆய்வாளர்கள் தற்போது உள்ள பூமி தொடர்பான ஆய்வு முறையை விட செயற்கை நுண்ணறிவு மூலம் வளிமண்டல மாற்றம் மற்றும் கடல் போக்குவரத்து, மண் நகர்வு, மற்றும் தாவர இயக்கவியல், புவி அமைப்பு என இதன் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு என்பது மிகப்பெரிய அளவில் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாக்ககூடும்.