பீர் என்ற வார்த்தையை கேட்டாலே ஜில்லென பலருக்கு இருக்கும் அதற்கு தற்பொழுது மேலும் மெருகூட்டும் வகையில் பெயின்கில்லர் மாத்திரைகளை விட பீர் மிக சிறப்பான வலி நிவாரணி என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெயின்கில்லர் மாத்திரை வேண்டாமே..! பீர் போதும்

பெயின்கில்லர் மாத்திரை

  • பாராசிட்டமால் மாத்திரைகளை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக பீர் விளங்குகின்றது.
  • மிகவும் கடுமையான வலிகளுக்கு ஏற்ற நிவாரனியாக உள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் க்ரீன்விச் பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் மிக கடுமையான வலிகளில் இருந்து விடுதலை பெறுவதற்கு வழங்கப்படும் வலி நிவாரனி மாத்திரைகளை காட்டிலும் சக்திவாய்ந்த கில்லராக பீர் விளங்குகின்றது.

க்ரீன்விச் பல்கலைகழகம் 400க்கு மேற்பட்ட நபரங்களை கொண்டு 18விதமான வழிகளில் ஆய்வு மேற்கொண்டதில் அதிகப்படியான பீர் அருந்துபவர்கள் வலி உள்ள நேரங்களில் மிக சிறப்பான வகையில் வலி குறைந்துள்ளதாகவும், மாத்திரைகளை காட்டிலும் சிறப்பாக செயல்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

பெயின்கில்லர் மாத்திரை வேண்டாமே..! பீர் போதும்

ட்ரெவர் தாம்சன் எனும் க்ரீன்விச் பல்கலைகழக ஆய்வாளர் கூறுகையில் ஓபியாயிட் (opioid drugs) மருந்துகள் வகையை சேர்ந்த கொடைன் (codeine) கலந்துள்ள வலி நிவாரணிகளை காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்த நிவாரனியாக பீர் உள்ளதாக உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மது அருந்துதல் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளதால் நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தாமல் வலி அதிகமாக உள்ள நேரங்களில் மட்டுமே பீர் அருந்தலாம் என்பதே ஆய்வாளர்களின் முடிவாக உள்ளது.

ஆனால் இந்த ஆய்வு நம்ம ஊருக்கு ரொம்ப பழசுதான்… உண்மையும் அதுதான்..! உங்க கமென்ட் பதிவு செய்யுங்க

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here