வருகின்ற பிப்ரவரி 15ந் தேதி இஸ்ரோ அமைப்பு ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C37 ராக்கெட் வழியாக 104 செயற்கைகோள்களும் செலுத்தப்பட உள்ளது.

ஒரே முயற்சியில் 104 செயற்கைகோள்களை அனுப்பும் இஸ்ரோ

இஸ்ரோ

இந்தியாவின் ISRO அமைப்பானது மிக சிறப்பான செயல்பாடுகளை வின்வெளியில் நிகழ்த்தி வருகின்றது. ஆசியாவிலே முதன்முறையாக நமது இஸ்ரோ அமைப்பு செவ்வாய் கிரகத்தில் மிக குறைந்த விலையில்  சிறப்பாக செயற்கை கோளை நிலை நிறுத்தியது.  மேலும் isro அதிகபட்சமாக ஒரே தடவையில் 20 செயற்கைகோள்களை  PSLV-C34 ஏவு வாகனத்தில் கடந்த 2016யில் செலுத்தியது,

தற்பொழுது PSLV-C37  (Polar Satellite Launch Vehicle -PSLV-C37 ) ஏவு வாகனத்தில் 104 செயற்கைகோள்களை ஒரே சமயத்தில் செலுத்த திட்டமிட்டுள்ளது.இவற்றில் 101 செயற்கைகோள்களை வெளிநாட்டு சாட்டிலைட்களாகும். இவற்றில் இடம்பெற்றுள்ள மற்ற மூன்றும் Cartosat series-2D எனப்படும் உயர்தர கேமரா படங்களை வழங்கும் வகையிலான நமது ராணுவ பயன்பாட்டிற்கான நுட்பத்தினை கொண்டதாகும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் “ PSLV-C37 செயற்கைக்கோள் ஏவு ஊர்தி வாயிலாக அனுப்படுகின்ற 104யில் பெரும்பாலானவை நானோ வகையிலான சாட்டிலைட்களாகும். இது சாதனை மற்றும் பிரபலப்படுத்தும் நோக்கிலோ இதனை அனுப்பவில்லை விலை குறைப்பினை நோக்கமாக கொண்டே அனுப்பபடுவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here