Mars Express Orbiter

செவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு ஆய்வினை மேற்கொள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் (Mars Express Orbiter) எனும் விண்கலத்தை அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் தொடர்ச்சியாக இந்த கோளின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த விண்கலம் ஆனுப்பிய படங்களின் மூலம் செவ்வாய் கிரகத்தில் மேற்பரப்பில் சகதி போன்ற அமைப்பு காணப்படுவதனால் விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் மூலம் செவ்வாயில் நீர் இருப்பதற்கான ஆதராம் இருக்கலாம் என குறிப்பிடுகின்றனர்.  மேலும் இந்த கிரகத்தில் முன்பாக நீர் ஆதாரங்கள் ஆறுகளை போல இருந்திருக்கலாம். அவை தற்போது அங்குள்ள சூழியியல் மாற்றத்தினால் மாறியிருக்கூடும் என குறிப்பிடுகின்றனர்.

Mars-Ancient-Rivers

எனவே இதன் காரணமாக நீர்பரப்பு தற்போது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழத்தில் நீர் காணப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். முன்பே செவ்வாயில் விஞ்ஞானிகள் பனி குன்றுகள் இருப்பதாக கண்டறிந்தனர்