மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எம்எஸ் பெயிண்ட் பிரஷ் டிராயிங் அப்பிளிகேஷனை முழுமையாக நீக்கவில்லை என மைக்ரோசாஃப்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
பெயிண்ட் பிரஷ்
நேற்று வைரலான எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷன் தொடர்பான செய்திக்கு மைக்ரோசாஃப்ட் மிக தெளிவான விளக்கத்தை வழங்கியிருப்பதுடன் எப்பொழுதும் பெயிண்ட் பிரஷ் உங்களுக்கு கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் அந்நிறுவனம் 3D பெயின்ட் அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய 3டி பெயிண்ட் செயலியில் பழைய பெயிண்ட் செயலியில் வழங்கப்பட்ட பல முக்கிய அம்சங்களுடன் கூடுதலாக 3D பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.
மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் 32 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற பெயிண்ட் தொடர்ந்து இலவசமாக விண்டோஸ் ஸடோரில் கிடைக்கும். இதனை இலவசமாக விண்டோஸ் 10 பயனாளர்கள் பெறலாம்.
அடிப்படையான படம் வரைவதற்கான மென்பொருள் என்ற அந்தஸத்தை 3டி பெயிண்ட் அப்பிளிகேஷன் கூடுதலான நவீன வசதிகளை பெற்றதாக உள்ள காரணத்தால் இணைக்கப்பட்டாலும், தொடர்ந்து இலவசமாக எம்எஸ் பெயிண்ட் கிடைக்கப் பெறும் என்பது உறுதியாகியுள்ளது.