மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் நானோ டைமண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டால் ஷாட் சர்க்யூட் மற்றும் தீப்பற்றுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

லித்தியம் பேட்டரிகள்

தலை முடியின் விட்டத்தை விட 10,000 மடங்கு குறைந்த சிறிய நானோ டைமண்ட் கொண்டு லித்தியம் பேட்டரிகள் உருவாக்கப்பட்டால் தீப்பற்றுதல் மற்றும் சாட் சர்க்யூட் போன்றவற்றால் மின்கலன் வெடிக்காமல் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக journal Nature Communications வெளியிட்டுள்ளது.

நானோ டைமண்ட் எலக்ரோலைட் போல செயல்பட்டு மின்கலன் சாட் சர்க்யூட் பிரச்சனையில் தீர்வு வழங்கும் வகையிலும், சிறந்த வகையில் கூடுதல் பேட்டரி திறனை பெறும் வகையிலும் அமைந்திருக்கும் என ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது பெரும்பாலான லித்தியம் பேட்டரிகள் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருவதனால் எதிர்காலத்தில் எளிதில் தீப்பற்றாத வகையில் பேட்டரிகள் வடிவமைக்கபடும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து அறிவியல் மற்றும் டெக் செய்திகளை வாசிக்க இங்கே களிக் பன்னுங்க ..