ஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible

வேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘Barnard B’ என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Barnard B

Barnard b (அல்லது GJ 699 b) என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற புதிய நட்சத்திரத்தில் பனி படலங்கள் மற்றும் நீர் இருப்பதற்கான காரணிகள் உள்ளதால், இந்த கிரகத்தில் உயிரனங்கள் வாழக்கூடும் என கூறப்படுகின்றது. இதனால் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலான ஏலியன்கள் இருக்கக்கூடும், என உறுதியாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

ஏலியன்கள் மிக தொலைவில் இருக்க வாய்ப்பில்லை, அவர்கள் பூமிக்கு மிக நெருக்கமான கோள்களில் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் 6 ஒளி ஆண்டு தொலைவில் இருந்து, அதாவது விநாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தால், 6 ஆண்டுகள் பயணிக்கும் தூரத்தில் இருந்து, ரேடியோ சிக்னல் கிடைத்திருப்பதை விஞ்ஞானிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

பார்னார்டு பி கிரகம் சூரியனை விட இரு மடங்கு பழமையானதாக இருக்க கூடும். சூரியன் 4.6 பில்லியன் வருட பழமையை கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் Barnard b கிரகம் 9.6 பில்லியன் வருடம் பழமையானதாக இருக்கலாம். மேலும், இந்த கிரகத்தில் சூரியன் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே, 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து, ரேடியோ சிக்னலை ஏலியன்கள் பூமிக்கு அனுப்பியுள்ளனர். இதை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள, விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது