குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் சிறப்பம்சங்கள்அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் வரிசையில் இடம்பெற உள்ள உயர்ரக செயல்திறன் மிக்க வசதிகளை பெறும் வகையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்

குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 845 முந்தைய சிப்செட் 835 மாடலை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு சார்ந்த திறன்களுடன் வோல்ட்இ மற்றும் கேமரா துறை ஆகியவற்றில் சிறப்பான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

845 சிப்செட் 10nm FinFET ஆர்க்கிடெச்சர் கொண்டு வடிவமைக்கப்பட்டு  LPP (Low-Power Plus) பிராசெஸ் கொண்டு சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த சிப்செட் முந்தைய சிப்செட் மாடல் 835-யை விட 10 சதவீத கூடுதல் பெர்ஃபாமென்ஸ் மற்றும் 15 சதவீத பவர் சேமிப்பு பெற்றதாக வரவுள்ளது.

845 சிப்செட் ஆக்டோ-கோர் உடன் நான்கு கார்டெக்ஸ் A75 கோர் மற்றும் நான்கு கார்டெக்ஸ் A55 கோர் பெற்றுள்ளது. புதிய Kryo 385 கஸ்டம் சிபியூ 25 சதவீத கூடுதல் பெர்ஃபாமென்ஸ் மற்றும்  3 கூடுதல் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இந்த சிப்செட்டில் Adreno 630 விஷூவல் பிராசெஸிங் மூலம் 30 சதவீதம் கிராபிக்ஸ் திறன் அதிகரிக்கபட்ட்டுள்ளது.

உயர் வேக டேட்டா

முந்தைய 835 சிப்செட்டை விட அதிவேகத்தில் தரவுகளை பெறும் வகையில் புதிய X20 LTE மோடத்தை பெற்றுள்ள இந்த சிப்செட்டில் அதிகபட்சமாக டேட்டா 1.2Gbps வேகத்தில் பெறலாம்.

டூயல் சிம் வோல்ட்இ

பெரும்பாலான மொபைல்கள் இரட்டை சிம் ஆதரவுடன் விற்பனை செய்யப்படுவதனால், இரண்டு சிம்களுக்கும் வோல்ட்இ ஆதரவை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன கேமரா துறை

நவீன கேமராக்களில் இடம்பெறுள்ள அம்சங்களை பெறும் வகையிங் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிப்செட்டில் உயர் தெளிவுத்திறன் பெற்ற 4கே வீடியோ பதிவு செய்வதுடன், படங்கள் பெறுவதில்,தற்போது ஆப்பிள் ஐபோன் X மாடலில் உள்ள கேமரா செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த வகை மொபைல்கள் விளங்கும்.

வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் என அனைத்திலும் மிக வேகமாக செயல்படும் திறன் பெற்றிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

ஆண்ட்ராய்டு மொபைல்கள் ஆப்பிள் கருவிகளை போன்ற பாதுகாப்பினை வழங்கவில்லை என்ற குற்றசாட்டை தவிடுபொடியாக்கும் வகையில், ஆப்பிள் கருவிகளுக்கு இணையான பயனர் விபரங்களை பாதுகாக்கும் வகையில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் விளங்கும் என குவால்காம் உறுதியளித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு  (AI)

எதிர்காலத்தில் முக்கிய அங்கமாக மாற உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனில் ஆப்பிள அறிமுகப்படுத்திய ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்களுடன் விளங்கும் என கூறப்பட்டுள்ளது.

உயர் தெளிவு திறன் படங்கள்,வீடியோ, அதிவேக டேட்டா, உயர் ரக பாதுகாப்பு மற்றும் ஏஐ போன்றவற்றை பெற்ற ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அடுத்த ஆண்டு முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி S9+, ஒன்பிளஸ் 6, எல்ஜி ஜி7 மற்றும் சியோமி மீ 7 ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here