வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக தெளிவாக காணலாம்.

சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம்

பொதுவாக வானிலை ஆய்வாளர்கள், சந்திர கிரகணத்தை பற்றி பல்வேறு பெயர்களில் குறிப்பிடுவது உண்டு அந்த வகையில் ப்ளட் மூன் என்பது சந்திர கிரகணத்தின் போது தோன்றும் ஒன்றாகும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து நிலா சிவப்பு நிறத்தில் தெரியும்.

அமெரிக்காவின் பூர்வ குடி மக்கள் குளிர்காலத்தில் வரும் பௌர்ணமி நிலவை வுல்ஃப் மூன் என்ற பெயரில் அழைக்கின்றார்கள். அதனை குறிப்பிடும் வகையில் சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகின்றது.

சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் மிக தெளிவாக காண இயலும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவத்துள்ளனர்.

ஆசியாவில் நிறைய பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வை காணபதற்கு இயல வாய்ப்பில்லை. ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11:41 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூப்பர் பிளட் வுல்ஃப் சந்திர கிரக நிகழ்வானது அதிகபட்சமாக மூன்றரை மணி நேரம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்வை இந்தியாவில் பெரிதாக காண இயலாது என கூறப்படுகின்றது.