150 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூப்பர் ப்ளூ பிளட் மூன் எனப்படும் ஊதா நிற முழு பெருநிலவு ஜனவரி 31,2018 தேதி இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஊதா நிற முழு பெருநிலவு

150 ஆண்டுகளுக்கு முன்னதாக,அதாவது மார்ச் 31, 1866 ஆம் ஆண்டு முழு பெருநிலவு காட்சிக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் வருகின்ற ஜனவரி 31,2018 அன்றைக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பார்க்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வருவதனால், முழு நிலவாக காட்சியளிக்கும் என்பதனால், ஊதா நிறத்திலான பெருநிலவு காட்சியளிக்க உள்ளது.

சூப்பர் மூன் இந்தியாவில் காணலாமா ?

ஜனவரி 31, 2018ந் தேதி இந்திய நேரப்படி மாலை 6.12 மணி முதல் சராசரியாக 77 நிமிடங்கள் அதாவது இரவு 7.37 மணி வரை இந்தியாவில் முழு பெருநிலவு கிரகணம் காட்சியளிக்க உள்ளது.

மிகப்பெரும் முழு நிலவு மிக அழகாக அலாஸ்கா, ஹவாய் தீவுகள், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் காணலாம்.