பூமியை தொடர்ந்து நிலவில் 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் வோடஃபோன், நோக்கியா, PTScientists மற்றும் ஆடி ஆகிய நான்கு நிறுவனங்களும் இணைந்தது நிலவில் 4ஜி சேவையை வழங்கும் திட்டத்தை செயற்படுத்த தொடங்கியுள்ளது.

நிலவில் 4ஜி இணைய சேவை

உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வருகின்ற வோடஃபோன் குழுமத்தின் வோடஃபோன் ஜெர்மனி தொலைத் தொடர்பு பிரிவு நிறுவனத்தின் ஆதரவுடன் ஜெர்மனி நாட்டின் PTScientists நுட்பம் தொடர்பான ஆதரவினை வழங்குவதுடன், நோக்கியா நிறுவனம் தொழிற்நுட்பத்தில் மிக சிறப்பான வகையில் இலகு எடை பெற்ற கருவியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் ஆடி நிறுவனம், தனி நிறுவனமாக லூனார் க்வார்டோ ஊர்தியை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. நான்கு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த 4ஜி இணைய சேவையை வழங்கும் கருவியினை அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கானவெரல் (Cape Canaveral ) பகுதியில் இருந்து இந்த சேவைக்கான ஃபால்கான் 9 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்ல உள்ளது.

இந்த கருவிகள் நிலவை சென்றடைந்து செயற்பட தொடங்கியதும், நிலவிலிருந்து ஹெச்டி தரத்தில் வீடியோவை உலகத்துக்கு அனுப்ப விஞ்ஞானிகள் வோடபோன் வாயிலாக திட்டமிட்டுள்ளனர்.