நோக்கியா 106 (2018) மொபைல் விற்பனைக்கு வெளியானது

இந்திய மொபைல் போன் சந்தையில் , 4ஜி ஆதிக்கம் அதிரித்து வரும் நிலையில் 2ஜி ஆதரவை பெற்ற, புதிய நோக்கியா 106 (2018) ஃப்யூச்சர் போன் ரக மாடல் ரூ.1,415 விலையில் விற்பனைக்கு பிளிப்கார்டில் கிடைக்கின்றது. மேலும் அமேசான் இந்தியாவிலும் கிடைக்கின்றது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 106 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 106 (2018) மாடலில் புதிதாக கிரே நிறம் இணைக்கப்பட்டு கூடுதலாக கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. இந்த மொபைல் போன் […]

நோக்கியா X6 மொபைல் போன் வெளியானது

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், புதிதாக நோக்கியா X வரிசை போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் சீனாவில் பிரத்தியேகமாக நோக்கியா X6 ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் X தோற்றத்தை பின்புலமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா X6 மொபைல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையில் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியான ஐபோன் X மாடலின் தோற்றத்தை உந்துதலாக கொண்ட விவோ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது நோக்கியா பிராண்டு மொபைலிலும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நோக்கியா […]

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விலை விபரம் கசிந்தது

வருகின்ற மே 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் படங்கள் மற்றும் நுட்ப விபரம் போன்றவை பரவலாக வெளிவந்த நிலையில் 4ஜிபி ரேம் பெற்ற நோக்கியா எக்ஸ்6 விலை விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 ஸ்மார்ட்போன் முழு காட்சி திரையை பெற்றதாக வரவுள்ள நோக்கியா எக்ஸ்6 மொபைல் போன் 5.8 அங்குல திரையை பெற்று  2280 x 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக குவால்காம் […]

நோக்கியா எக்ஸ் மொபைல் படங்கள் வெளியானது

வருகின்ற மே 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புத்தம் புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போன் மாடலின் புகைப்படங்க்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா எக்ஸ் மிக நேர்த்தியான முழு அளவு காட்சி திரையை கொண்டதாக விளங்குகின்றது. நோக்கியா X6 ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படும் நோக்கியா பிராண்டின் புதிய வரிசையாக நோக்கியா X இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது,. சமீபத்தில் வெளியாகியுள்ள படங்களில் வாயிலாக நோக்கியா எக்ஸ் 6 ஐபோன் X போன்ற தோற்ற […]

விரைவில் நோக்கியா N9 மொபைல் போன் அறிமுகம் ?

  ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், தொடர்ந்து நோக்கியா பிராண்டின் முந்தைய தலைமுறை நோக்கியா 3310, நோக்கியா 8110, சிராக்கோ ஆகிய மாடல்களை போல நோக்கியா N9 மாடலை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மே 2ந் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நோக்கியா N9 மொபைல்   நோக்கியா பிராண்டில் வெளியன நோக்கியா என் வரிசை மொபைல் போனில் நோக்கியா என்9 மாடல் மே 2ந் தேதி வெளியாகலாம் என சீன சமூக வலைதளமான வீப்போ வாயிலாக வெளிவந்துள்ளது. […]

நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் – MWC 2018

முதல் தலைமுறை மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிய வளைந்த நோக்கியா 8110 ஸ்லைடர் மேட்ரிக்ஸ் போன், தற்போது 4ஜி ஆதரவுடன் கூடிய நோக்கியா 8110 4G ஸ்லைடர் மொபைலாக பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் ஃபீச்சர் ரக 4ஜி மொபைல் […]

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் நுட்பம் மற்றும் விலை விபரம் – MWC 2018

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட போன் உட்பட நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 8110 4ஜி  போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 7 பிளஸ் கடந்த 2017 ஆம் ஆண்டில் சுமார் 70 மில்லியன் ஸ்மார்ட்போன் கருவிகளை டெலிவரி வழங்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் முழு விஷன் டிஸ்பிளே […]

நோக்கியா 7 பிளஸ் மொபைல் விபரம் வெளியானது – MWC 2018

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டதாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நோக்கியா 7 பிளஸ் மொபைல் ஜீக்பெஞ்சு சோதனையில் சிக்கிய விபரங்களில் புதிய நோக்கியா 7 பிளஸ் மொபைலின் ரேம் மற்றும் பிராசெஸர் சிப்செட் விபரங்கள் கசிந்துள்ளது. ஆனால் டிஸ்பிளே மற்றும் முக்கிய வசதிகள் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கடந்த அக்டோபரில் சீனா சந்தையில் முதன்முறையாக அறிமுகம் […]