ரூ.1.1க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்

பாரத் ஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.1.1 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. பாரத் ஃபைபர் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஜியோ ஃபைபர் பிராட்பேண்டுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனத்தின் ஃபைபர் டூ தி ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மிக சிறப்பான வேகத்தில் இணையத்தை அனுக வழி வகுக்கப்பட்டுளது. வாடிக்கையாளர்கள் மிக வேகமான இணையத்தை விரும்ப தொடங்கியுள்ளனர். பயனாளர்கள் முன்பை விட அதிகமான எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை இணையத்தின் வாயிலாக […]

BSNL : ரூ.98க்கு தினமும் 1.5 ஜி.பி. பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி ஆஃபர்

டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய சவாலாக அமைந்த ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பிஎஸ்என்எல் டேட்டா சலுகை மூலம் தெறிக்கவிடுகின்றது. ரூ.98 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பிளானை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம்,  ரூ.399 பிளானில் 1 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஆஃபரை தெறிக்கவிடும் வகையில் டேட்டா சுனாமி என ரூ.98 கட்டணத்தில் அறிவித்துள்ளது. […]

BSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்

பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited -BSNL) டெலிகாம் நிறுவனம், ரூ.399 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிளான் ஜனவரி 31ந் தேதி வரை மட்டும் கிடைக்கும். பிஎஸ்என்எல் ரூ.399 பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.399 பிளான் மிகவும் பிரசத்தி […]

ரூ.299க்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் : BSNL

நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், ரூ.299 கட்டணத்திலான பிளானுக்கு பிராட்பேண்ட் சேவையில் உள்ள பயனாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஒரு வருட திட்டத்தில் இணைபவர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக வழங்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் ரூ.299 பெரும்பாலான முன்னணி நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் கம்பி வழி இணைய சேவை ஜியோ ஃபைபர் தொடங்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் வழங்குநராக விளங்கும் பிஎஸ்என்எல் தனது திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ப்ரீபெய்டு மொபைல் பயனாளர்கள் […]

ரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL

ஜியோ உள்ளிட்ட தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனம், தனது போஸ்ட்பெயிடு பயனாளர்களுக்கு ரூ.798 கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. மிக கடுமையான சவால் நிறைந்த டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து.  ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் மிக கடுமையாக பின்னடைவு சந்தித்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், தொடர்ந்து சிறப்பான பிளான்களை பயனாளர்களுக்கு 2ஜி மற்றும் 3ஜி சேவையில் வழங்கி வருகின்றது. […]

பிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக்கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா வழங்கும் முறையை செயற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் ஆப் ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டேட்டா சலுகை பி.எஸ்.என்.எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள இதனை டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. […]

புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ரூ.29 பிளான் முழுவிபரம்

பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற தொடக்கநிலை ரீசார்ஜ் பிளானான ரூ.29 திட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள விபரத்தை பின்வருமாறு காணலாம். புதுப்பிகப்பட்டுள்ள ரூ. 29 கட்டணத்திலான தொடக்கநிலை பிளானில் நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1 ஜிபி உயர்வேக 2ஜி அல்லது 3ஜி தரவினை பெறுவதுடன் , அளவில்லா வாய்ஸ் கால் (டெல்லி மற்றும் மும்பை தவிர) இலவச PRBT (காலர் ட்யூன்) , 300 இலவச உள்ளூர் மற்றும் தேசிய […]

இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்

பொதுத்துறை தொலை தொடர்பு பி.எஸ்.என்.எல் நிறுவனம், இணைய சேவையை கொண்டு நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அழைப்பினை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை விங்ஸ் ஆப் (Wings App) வாயிலாக வழங்கியுள்ளது. இணைய தொலைபேசி என அறியப்படுகின்ற இந்த சேவையை பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற செயலி வாயிலாக மொபைல் மற்றும் தொலைபேசி என இரண்டுக்கும் செயற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக இந்த செயலி வாயிலாக இதே செயலி கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பை மேற்கொள்ள இயலும் என்ற நிலையை […]