ஜியோவின் பெரிய திரை பட்ஜெட் ஸ்மார்ட்போன் வருகை விபரம்

பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களை கொண்ட பிரத்தியேகமான ஜியோ ஸ்மார்ட்போன் மாடலை ரிலையன்ஸ் ஜியோ தயாரிக்க அமெரிக்காவின் ஃபிளெக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகின்ற ஃபீச்சர் ரக ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், ஃபீச்சர் ரக மொபைல் மாடலில் இருந்து விடுபட்டு புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களை குறிவைத்து இந்த […]

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்ராக 3 மாதங்களுக்கு 300 ஜிபி டேட்டா வழங்குகிறது; இது பற்றி தெரிந்து கொள்ள….

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாபைபர் பிராடுபேண்டுகளுக்கான சேவையை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. முகேஷ் அம்பானி-யின் நிறுவனமான இந்த நிறுவனம், தங்கள் சேவையை விரும்பும் வாடவாடிக்கையாளர்களுக்கு விரைவில் பிரிவியூ ஆப்பரை அறிமுகம செய்ய உள்ளது முன்னிரிமை அடிப்படையில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பிரிவியூ ஆப்பரில், மூன்று மாதம், சோதனை அடிப்படையில் அதிவேக டேட்டாக்களை பயனாளர்களுக்கு வழங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு […]

ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber

சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 41வது ஆண்டு வருடாந்திர பொது கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் (Jio GigaFiber) பிராட்பேண்ட், ஜியோ ஜிகா டிவி, ஜியோபோன் 2, ஜிகா ஸ்மார்ட்ஹோம் சிஸ்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய தொலை தொடர்பு சந்தையில் 4ஜி சேவை வாயிலாக களமிறங்கி ஜியோ நிறுவனம், சுமார் 22 மாதங்களில் 21.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை பெற்ற மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ந் தேதி ஜியோபோன் 2 மொபைலை […]

ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ “ஜீரோ டச்” பிளான் அறிமுகம்

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், புதுமையான முறையில் ஜியோ ஜீரோ டச் ( Jio Zero-Touch) என்ற பெயரில் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜீரோ டச் 4ஜி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் , மிகவும் சவாலான கட்டணத்தில் டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், ரோமிங் இல்லா ஒரே இந்தியா திட்டம் என பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தி மிக […]

ஒரு வருடம் இலவச சேனல்கள், செட் டாப் பாக்ஸ் – ரிலையன்ஸ் பிக் டிவி

அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் சேவையை நாடு முழுவதும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக ஒரு வருட இலவச சந்தாவுடன் வழங்குகின்றது. ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக வழங்கப்பட உள்ள ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் சேவையில் இலவச செட் டாப் பாக்ஸ், ஒரு வருட இலவச ஹெச்டி சேனல்கள் , மற்றும் […]

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ரிலையன்ஸ் ஜியோ ஹேப்பி நியூ இயர் பிளான்கள்

இந்தியாவில் 4ஜி சேவையை மிக வேகமாக கொண்டு சேர்த்த பெருமைக்குரிய ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் மீண்டும் அதிரடியான ஜியோ ஹேப்பி நியூ இயர் 2018 திட்டங்களை அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜியோ ஹேப்பி நியூ இயர் 2018 ஏர்டெல், வோடபோன்,ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் ஜியோ நிறுவனம் இரண்டு விதமான டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது, தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 1.5ஜிபி டேட்டா என இரு விதமான திட்டங்களில் […]

அமேசானில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்கலாமா ?

முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஃபோகாம் அறிமுக செய்த 4ஜி ஆதரவு பெற்ற இலவச ஃபீச்சர் ரக மொபைல் போன் அமேசான் இணையதளத்தில் ரூ.1690 விலையில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோன்   ஜியோ 4ஜி நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை குறிவைத்து டி9 கீபேட் கொண்டதாக அறிமுகம் ஃபீச்சர் ரக ஜியோ போன் முதற்கட்டமாக நடைபெற்ற முன்பதிவினை தொடர்ந்து அடுத்தகட்ட முன்பதிவு மற்றும் விற்பனை தொடங்கப்படாமல் உள்ள நிலையில் […]

விரைவில் ரிலையன்ஸ் ஜியோபோன் மறு விற்பனை ஆரம்பம்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரிலையன்ஸ் ஜியோபோன்  மறுவிற்பனை விரைவில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ ஃபோன் கடந்த ஆகஸ்ட் 24 முதல் 26 வரை நடைபெற்ற முதற்கட்ட விற்பனையில் சுமார் 60 லட்சம் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு முதற்கட்ட டெலிவரி ஏறக்குறைய நிறைவடைந்திருக்கும் சூழ்நிலையில், மறு விற்பனை விரைவில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிறுவனம் முன்பதிவினை தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரூ.1500 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட […]