ஒரு வருட வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா அறிவித்த வோடபோன்

வோடபோன் ரூ.1999 கட்டணத்தில் வெளியிட்டுள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா சலுகையை 365 நாட்களுக்கு அறிவித்துள்ளது. கூடுதல் நன்மையாக அளவில்லா அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை வழங்குகின்றது. பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் வருடாந்திர பிளான்களை வெளியிடுவதில் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக வோடபோன் நிறுவனத்தின் இரண்டாவது வருடாந்திர பிளானாகும். இதற்கு முன்பாக ரூ.1,699 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை வெளியிட்டிருந்தது. […]