ஏர்டெல் இலவச ரோமிங் ஏப்ரல் 1 முதல்

Ads

ஜியோ புரட்சி எதிரொலியின் காரணமாக இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் கட்டணமின்றி இலவச ரோமிங் திட்டத்தை ஏப்ரல் 1 ,2017 முதல் செயல்படுத்த உள்ளது.

ஏர்டெல் ரோமிங்

268 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் ஜியோ வரவின் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் சமீபத்தில் டெலிநார் மொபைல் சேவையை கையகப்படுத்தியுள்ளது.

வோடாபோன் , ஜியோ மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் நாடுமுழுவதும் இலவச ரோமிங் திட்டத்தை செயல்படுத்துவதனால் ஏர்டெல் அதிரடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1 , 2017 முதல் இன்கம்மிங் அழைப்புகள் , எஸ்எம்எஸ் போன்றவற்றுக்கு இலவசமாக பெறலாம். மேலும் அழைக்கப்படுகின்ற அழைப்புகளுக்கும் சாதரன கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா போன்ற பயன்பாடுகளில் பிளான்களின் அடிப்படையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரோமிங் குறித்து கருத்து தெரிவித்த ஏர்டெல் தற்பொழுது சர்வதேச ரோமிங் கட்டணங்கள் மிகுந்த சலுகையுடனே வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இதற்காக உள்ள பிரத்யேக் பிளான்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் சிறப்பான பல் அடைகின்றார்கள் என தெரிவித்துள்ளது. இந்த பேக்குகள் 1 நாள் ,10 நாள் ,30 நாள் போன்றவை கொண்டதாக இவற்றில் இலவச இன்கம்மிங் இந்திய அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மேலும் உள்நாட்டு அழைப்பு வழங்கப்படும்.மேலும் சிறப்பான டேட்டாவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.