ஏர்டெல் ஹேப்பி ஹவர்ஸ் சலுகை 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்

Ads
ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்யும்பொழுது 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்.அனைத்து ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெறலாம்.

ஹேப்பி ஹவர்ஸ் சலுகையை பெற அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையிலான நேரத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் ஆப்ஸ்களுக்கு 200MB டேட்டா தேவைப்படுகின்றது என்றால் 100MB டேட்டா உங்கள் கணக்கில் திரும்ப கிடைக்கும்.

யூடியூப் மற்றும் ஃபாஸ்ட்பீலிம்ஸ் போன்ற ஆப்ஸ்களில் இந்த சலுகை முன்பே இணைக்கப்பட்டுள்ளதால் இவற்றில் தரவிறக்கம் செய்யும் அனைத்திற்கும் ஸ்மார்ட் ஆஃப்லைன் ஏனப்படும் யூடியூப் வசதியுடன் கூடுதலாக ஹேப்பி ஹவர்ஸ் அதிகாலை 3மணி முதல் 5 மணி வரை தரவிறக்கம் செய்யும் அனைவர்களுக்கும் 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்.

இந்தியாவில் யூடியூப் ஸ்மார்ட் ஆஃப்லைன் பெறும் வழிமுறை

ஆப்ஸ் உருவாக்குநர்களுக்கு இலவச API ஒன்றை வழங்கியுள்ளது.இதனை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆப்ஸ்கள் அனைத்துக்கும் இந்த வசதியை பெறலாம்.

இந்த வசதியை பெறுவதற்கு ஹேப்பி ஹவர்ஸ் சேவையை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே பெற முடியும்.

Comments

comments