ரூ. 249 க்கு அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் : வோடாபோன் 2ஜி

Ads

ஜியோ புரட்சி காரணமாக மிக மலிவான விலையில் டேட்டா கட்டணங்கள் கிடைக்க தொடங்கி உள்ள நிலையில் வோடாபோன் 2ஜி சேவையில் ரூ. 249 கட்டணத்தில் அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் வழங்க உள்ளது.

வோடாபோன் 2ஜி

வோடாபோன் 4ஜி சேவையில் ரூ.346 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 28ஜிபி டேட்டா வழங்குவதுடன் கூடுதலாக வரம்பற்ற அழைப்புகளை கொடுக்கின்றது. மேலும்அதிகப்படியாக உள்ள 2ஜி வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய வோடாபோன் வெல்கம் ஆஃபர் என்ற பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வோடாபோன் மொபைலில் இருந்து *121# என்ற எண்ணுக்கு டயல் செய்த பின்னர்அதில் உள்ள டேட்டா ஆப்ஷனை கொண்டு ரூ.249 விலை உள்ள பேக்கினை ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற 2ஜி டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகின்றது.

மேலும் புதிய வோடாபோன் வாடிக்கையாளர்களை வரம்பற்ற அழைப்புகள் மற்றும்டேட்டா போன்றவற்றை முதல் மூன்று மாதங்ளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது.