ஏர்டெல் சிம் 30ஜிபி இலவச டேட்டாவுடன் அறிமுகம்

Ads

இந்தியாவின் முன்னணி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில் புதிதாக ரூ.299 திட்டத்தில் வீட்டிற்கு சிம் வருவதுடன் 30ஜிபி இலவச டேட்டா வழங்குகின்றது.

ஏர்டெல் சிம் 30ஜிபி இலவச டேட்டா

ரூ.499 முதல் ரூ.1199 வரையிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஏர்டெல் நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு என ரூ.299 கட்டணத்தில் மாதந்தோறும் 10 ஜிபி டேட்டா என மொத்தம் 30ஜிபி தரவுகளை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.

ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பக்கத்தில் இதற்கான முன்பதிவு செய்யப்படுகின்ற, முன்பதிவு செய்யும் புதிய பயனாளர்களுக்கு வீட்டிற்கே சிம் டெலிவரி செயப்பட உள்ளது.

தற்போது கூடுதலாக 30GB டேட்டா திட்டத்தை பயன்படுத்தும் புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக 30GB கிடைக்கும், அதாவது மாதந்தோறும் 10ஜிபி டேட்டா என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

ஜியோ வரவிற்கு பிறகு மிக கடுமையான சவால்கள் நிறைந்ததாக மாறியுள்ள தொலைத்தொடர்பு துறையில் தங்களுடைய பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளவதற்கும், புதிய பயனாளர்களை இணைக்கவும் முன்னணி நிறுவனங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் இந்நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு ஏர்டெல் லைவ் டிவி செயலியை தரவிறக்கி பயன்படுத்தினால் 6 மாதங்களுக்கு மாதந்தோறும் 10ஜிபி டேட்டா என மொத்தம் 60ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் ரூ.2500 விலையில் 4ஜி போன் மாடலை வெளியிட உள்ளது.

Comments

comments