தினமும் 1ஜிபி டேட்டா வெறும் ரூ.199 மட்டுமே : ஏர்டெல் ஆஃபர்

ஏர்டெல் ரூ.199 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

Ads

ஜியோ 4ஜி நிறுவனத்துக்கு எதிராக மீண்டும் ஒரு சவாலான பிளானை ஏர்டெல் ரூ.199 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகளை வழங்கும் வகையில் வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.199 பிளான்

புதிய தொலைத்தொடர்பு நிறுவனமாக களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பல்வேறு விதமான அதிரடி சலுகைகள் மற்றம் வரம்பற்ற அழைப்புகள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இதனை எதிர்கொள்ள ஏர்டெல் நிறுவனம் ரூ.149, ரூ. 349 மற்றும் ரூ. 399 ஆகிய திட்டங்களை வெளிப்படுத்தியிருந்தது.

தற்போது இந்த வரிசையில் ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.199 கட்டணத்தில் 28 நாட்கள் கால அளவுடன் தினசரி பயன்பாட்டிற்கு 1ஜிபி 4ஜி டேட்டா வழங்குவதுடன், கூடுதலாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் (அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1200 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் ) அழைப்புகளை வழங்குகின்றது.

இதே பிளான் புதிய ஏர்டெல் சிம் வாடிக்கையாளர்கள் முதல் அல்லது இரண்டாவது ரீசார்ஜ் செய்யும்போது ரூ.178 கொண்டு ரீசார்ஜ் செய்தால் ரூ.199 பிளான் சிறப்புகளை பெறலாம்.

மற்றொரு புதிய பிளானாக வெளியிடப்பட்டுள்ள ரூ.149 திட்டத்தில் 28 நாட்கள் கால அளவுடன் 2ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் ஆகியவை 4G H/S மற்றும் 4ஜி சிம் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது.

இந்த சிறப்பு சலுகையை பெறுவதற்கு உங்கள் மொபைல் நம்பருக்கு பெற  ஏர்டெல் இணையதளம் அல்லது மை ஏர்டெல் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முந்தைய ரூ.149, ரூ. 349 மற்றும் ரூ. 399 ஆகிய விபரங்களை இங்கே படிக்கலாம். சமீபத்தில் ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு தினசரி வரம்பற்ற அழைப்புகள் 300 நிமிடமாக வரையறுத்துள்ளது.

Comments

comments