ஃபேன்ஸி நம்பர்களை ஏலத்தில் விடும் பிஎஸ்என்எல்

Ads

நாட்டின் பொது தொலைத்தொடர்புத் துறை பிஎஸ்என்எல் நிறுவனம் ஆன்லைன் வாயிலாக ஃபேன்ஸி நம்பர்களை ஏலத்தில் எடுக்கும் வகையிலான சேவையை தொடங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் ஃபேன்ஸி நம்பர்கள்

நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் பிஎஸ்என்எல் ஆன்லைன் ஏலத்தை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2, 2017 முதல் ஆகஸ்ட் 8, 2017 வரை http://eauction.bsnl.co.in என்ற இணையப்பக்கத்தில் நடைபெறுகின்றது.

ரூ.150 செலுத்தி முன்பதிவு செய்து கொண்டு ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்கலாம்.ரூ.3000 முதல் ரூ.50,000 வரையிலான தொகையிலான விலையில் ஏலத்தில் எடுக்கலாம்.

ஃபேன்ஸி எண் வாங்க விரும்புபவர்கள் ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் வழியாக ஏலத்தில் பங்கேற்கலாம்.