பி.எஸ்.என்.எல் 599 வரம்பற்ற பிராட்பேண்ட பிளான் அறிமுகம்

Ads

பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் பல்வேறு பிளான் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது. BB249 திட்டத்தில் வரம்பற்ற டேட்டா சலுகையை வழங்க தொடங்கியுள்ளது.

பி.எஸ்.என்.எல் 599

கடந்த ஜூலை 10, 2017 முதல் சில மாறுதல்களை தங்களுடைய பிளானில் மேற்கொண்டுள்ளது குறிப்பாக பிரசத்தி பெற்ற BB249 ஆரம்பகட்ட பிளானில் தற்போது 2 Mbps வேகத்தில் 5ஜிபி டேட்டா மற்றும் அதன் பிறகு 1 Mbps வேகத்தில் வரம்பற்ற இணையத்தை பெற அனுமதிக்கின்றது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள BBG599 திட்டத்தில் 2 Mbps வேகத்தில் வரம்பற்ற இணையத்தை பெற அனுமதிக்கின்றது. முந்தைய 1199 திட்டத்தில் இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ரூ.1199 பிளான் 4 Mbps வேகத்தில் 50GB டேட்டா வழங்குகின்றது. அதன் பிறகு 50ஜிபி டேட்டா பயன்படுத்த 2 Mbps வேகமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

ரூ.675 திட்டத்தில் தற்போது 4 Mbps வேகத்தில் 10GB டேட்டா வழங்குகின்றது. முன்பு 5ஜி.பி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. மற்றொரு திட்டமான ரூ.675 திட்டத்தில் தற்போது 4 Mbps வேகத்தில் 30GB டேட்டா வழங்குகின்றது. முன்பு 20ஜி.பி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது.