ரூ.396 க்கு 70 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா

Ads

ரூபாய் 396 கட்டணத்தில் 70 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற ஐடியா அழைப்புகளை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றது.

ஐடியா டேட்டா பிளான்

ஐடியா நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி என வரையறுக்கப்பட்ட டேட்டாவை 70 நாட்களுக்கு ரூபாய் 396 கட்டணத்தில் வழங்குகின்றது. மேலும் இந்த பிளானில் ஐடியா எண்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இலவசமாக வழங்குகின்றது.

மற்ற நெட்வொர்க்குகளுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள், வாரத்திற்கு அதிகபட்சமாக 1200 நிமிடங்கள் வரையும் என மொத்தமாக 70 நாட்களுக்கு வழங்குகின்றது. வாரம் 1200 நிமிடங்கள் கடந்த பிறகு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐடியா நிறுவனத்தின் ஆப் வாயிலாக இந்த சலுகை விபரங்கள் கிடைக்க பெறும் . இந்த சலுகை 4ஜி சேவை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.