ஐடியா இலவச ரோமிங் ஏப்ரல் 1 முதல் அறிமுகம்

Ads

ஐடியா செல்லுலார் நிறுவனம் தங்களுடைய 27 கோடி வாடிக்கையாளர்களுக்கும் இலவச ரோமிங் திட்டத்தை வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

ஐடியா ரோமிங்

ஜியோ தெருக்கடியால் வோடாஃபோன் இலவச ரோமிங் சேவையை அறிவித்தை தொடர்ந்து ஏர்டெல் ஏப்ரல் 1 முதல் இலவச ரோமிங்கை அறிவித்துள்ள நிலையில் தற்பொழுது ஐடியா நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ஐடியாவின் 2ஜி ,3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே இந்த கட்டணமில்லா ரோமிங் சேவையில் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பெற இயலும். இதுதவிர டேட்டா பயன்பாட்டிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் சவாலான விலையில் கிடைக்கும்.

இது தவிர இன்ட்ர்நேஷனல் ரோமிங் திடத்துக்கு பல்வேறு இலவச சலுகைகள் மற்றும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் அனைத்து இன்கம்மிங் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகின்றது. முழுபிளான் விபரத்தை காண படத்தில் பாருங்கள்.

அடுத்த சில நாட்களில் ஐடியா-வோடாஃபோன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள பேச்சு வார்த்தையில் பலதரபட்ட சேவைகளை வழங்க இருநிறுவனங்களும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது

இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க கேட்ஜெட்ஸ் தமிழன் பின் தெடர்க….

Comments

comments