ரிலையன்ஸ் ஜியோபோன் டேட்டா பிளான் மற்றும் எதிர்கால மாற்றங்கள்

Ads

முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்தின் ஃபீச்சர் ரக 4ஜி ஜியோபோன் முதற்கட்ட விற்பனையை தொடர்ந்து அடுத்தகட்ட விற்பனை தொடங்கப்படாமல் உள்ள நிலையில் ஜியோபோனின் அடுத்த நகர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

ஜியோபோன் டேட்டா பிளான்

டெலிகாம் துறையை மிகுந்த சவாலாக மாற்றி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.1500 மதிப்பிலான இலவச ஜியோபோன் மொபைலுக்கு என பிரத்தியேக டேட்டா திட்டங்களை ஜியோ தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது.

ஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட ரூ.153 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

புத்தம் புதிதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அதாவது ரூ.50 க்கு குறைவான கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் இலவசமாக வரம்பற்ற அழைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த ஜியோபோன் விற்பனை

தற்போது வரை அடுத்த ஜியம்போன் விற்பனை விபரம் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், விற்பனை செய்யப்பட்ட மொபைல்களுக்கு தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை ஜியோ வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.

அடுத்தகட்ட ஜியோபோன் விற்பனைக்கு முன்னதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையிலான ஜியோபோன் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகின்றது. எனவே புதிய ஜியோபோன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு முன்னணி ரீடெயிலர்களிடம் ஜியோபோன் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

ஜியோ போன் நுட்பம்

2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

Comments

comments