மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் 42 கோடியாக அதிகரிக்கும்- IAMAI

Ads

இந்திய தொலை தொடர்பு துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் 420 மில்லியன் அல்லது 42 கோடியாக மொபைல் இன்டர்நெட் பெறுவோர்  எண்ணிக்கை உயரும் என ஐஏஎம்ஏஐ ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள்

கடந்த டிசம்பர் 2016 வரையிலான முடிவின் படி மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை 38.9 கோடியாக இருந்துள்ளதாக இந்திய இன்டர்நெட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய சந்தை ஆராய்ச்சி பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் வருகின்ற ஜூன் மாத முடிவில் மொபைல் வழியாக இணைய இணைப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை 42 கோடியாக அதிகரிக்கும் எனவும் இதில் நகர்புறத்தில் 25 கோடியாகவும் , ஊரக பகுதியிலிருந்து 17 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நகர்புறத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் சமூக வலைதளம், தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கிராமப்புற பகுதிகளில் உள்ள இன்டர்நெட் பயனாளர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவதாக தெரியவந்துள்ளது.

வருகின்ற  காலத்ததில் நகர்புறங்களில் 16 சதவீதம், கிராமப்புறத்தில் 51 சதவிகிதம் இன்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.