ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது

ஆர்காம் – ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பு திட்டத்திற்கு வங்கிகள் அனுமதி வழங்காத காரணத்தால் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ads

முகேசு அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை செயற்படுத்த தொடங்கியிருந்த திட்டத்தை கைவிடுதவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்காம் – ஏர்செல்

கடந்த ஆண்டு இந்திய தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி சலுகைகளின் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தையும், வோடபோன்-ஐடியா இணைப்பு மற்றும் ஏர்செல்- ரிலையன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் இணைப்பு ஆகிய திட்டங்களை நிறுவனங்கள் தேற்கொண்டிருந்த நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை தவிர மற்ற நிறவனங்களின் இணைப்பு ஏறக்குறைய செயற்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளது.

ஆர்­காம் என, அழைக்­கப்­படுகின்ற, ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறுவனம், அனில் அம்பானிதலை 46 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்­ளது. இதை, ஏர்­செல் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபா­யாக குறைக்கவும், ஜியோ-வின் பாதிப்பு மற்றும் கடன் அளவை குறைக்க ஆர்­காம் திட்­ட­மிட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பிற்கு, ஆர்காம் டெலிகாம் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடனை அடைக்க வேறு வழியைக் கையாள முடிவு செய்துள்ளது.

எனவே,இரு நிறுவனங்களும் பல்வேறு  சட்­டம் மற்றும் ஒழுங்­கு­முறை அமைப்­பு­கள், அனு­மதி வழங்­கா­மல் இழுத்­த­டிப்­ப­தா­லும், பல தரப்­பி­னர், உள்­நோக்­கத்­து­டன் தலை­யிட்டு உள்­ள­தா­லும், நிறுவனங்களின் பரஸ்­பர ஒப்புதலுடன், இணைப்பு திட்­டத்தை கைவிட்டு உள்­ள­தாக, ஆர்­காம் தெரிவித்துள்­ளது.

Comments

comments