ரூ.149க்கு அன்லிமிடேட் டேட்டா 28 நாட்களுக்கு வழங்கும் ஜியோ

Ads

ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.149 பிளானில் 2ஜிபி உயர் வேக 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ 149

ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது சேவைகளில் பல்வேறு மேம்பாடுகளை செயற்படுத்தி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ரூ.149 திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.149 திட்டத்தில் 28 நாட்கள் கால அளவுடன் 2ஜிபி உயர்வேக டேட்டா வழங்குவதுடன் , அதன்பிறகு டேட்டா வேகம் 64 kbps ஆக குறைக்கப்பட உள்ளது. இதுதவிர வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , 300 எஸ்.எம்.எஸ்-களை வழங்குகின்றது. பொதுவாக மற்ற திட்டங்களில் உயர்வேக டேட்டா தீர்ந்த பிறகு 128 kbps வேகமாக வழங்கப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்வதில் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.149 திட்டத்தில் 28 நாட்கள் கால அளவுடன் 2ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் ஆகியவை 4G H/S மற்றும் 4ஜி சிம் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது.